/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஆசிரியர்கள் இடமாறுதல் வரும் 18ல் கவுன்சலிங்ஆசிரியர்கள் இடமாறுதல் வரும் 18ல் கவுன்சலிங்
ஆசிரியர்கள் இடமாறுதல் வரும் 18ல் கவுன்சலிங்
ஆசிரியர்கள் இடமாறுதல் வரும் 18ல் கவுன்சலிங்
ஆசிரியர்கள் இடமாறுதல் வரும் 18ல் கவுன்சலிங்
ADDED : ஆக 09, 2011 01:57 AM
சேலம்: சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் வெளியிட்டுள்ள அறிக்கை:சேலம்
மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள
பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், காப்பாளர்,
காப்பாளினிகள், பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி காப்பாளர்கள்,
துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்
ஆகியோருக்கு, 2011 - 12ம் ஆண்டுக்கான இடமாறுதல் தொடர்பான கவுன்சலிங் வரும்
18ம் தேதி நடக்க உள்ளது.மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்உள்ள, ஆதிதிராவிட நல
அலுவலகத்தில், 18ம் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
மாவட்டத்துக்குள்
இடமாறுதல் கேட்கும் ஆசிரியர்கள், காப்பாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்
கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


