/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/அகதிகள் முகாமில் அதிகாரிகள் இல்லாததால் பணிகளில் சுணக்கம்அகதிகள் முகாமில் அதிகாரிகள் இல்லாததால் பணிகளில் சுணக்கம்
அகதிகள் முகாமில் அதிகாரிகள் இல்லாததால் பணிகளில் சுணக்கம்
அகதிகள் முகாமில் அதிகாரிகள் இல்லாததால் பணிகளில் சுணக்கம்
அகதிகள் முகாமில் அதிகாரிகள் இல்லாததால் பணிகளில் சுணக்கம்
சிவகங்கை : அகதிகள் முகாமிற்கு அதிகாரிகள் இல்லாததால் வழக்கமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்த பிரிவில் தாசில்தார், இரண்டு உதவியாளர்கள், 1 இளநிலை உதவியாளர், 1 அலுவலக உதவியாளர் பணியிடம் உள்ளது. இதில் இளநிலை உதவியாளர் பணிதவிர மற்ற இடங்கள் காலியாக உள்ளது.ஏற்கனவே ஒரு உதவியாளர் பணியிடமும், அலுவலக உதவியாளர் பணியிடமும் காலியாக உள்ள நிலையில் தற்போது தாசில்தார் பணியிடத்திற்கு அதிகாரி நியமிக்கப்படாததால், அகதிகள் முகாமிற்கு மாத மாதம் அனுப்ப வேண்டிய மாத அறிக்கை, அவர்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். அகதிகள் முகாமை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், '' எனது மகனை தற்போது படித்து வரும் பள்ளியில் இருந்து அருகில் உள்ள பள்ளிக்கு மாற்ற அதிகாரியின் கையெழுத்து தேவைப்படுகிறது. அதிகாரி இல்லாததால் கையெழுத்து வாங்க முடியாமல் தவிக்கிறேன். அதிகாரி நியமனத்திற்கு பிறகே வர சொல்லி விட்டனர்,'' என்றார்.


