Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

ADDED : ஆக 08, 2011 03:13 AM


Google News
ப.வேலூர்: காவிரி ஆற்றின் கரையோரம், கோரைக்காட்டில் பணம் வைத்து சூதாடிய ஏழு பேரை, ப.வேலூர் போலீஸார் கைது செய்தனர்.

ப.வேலூர் காவிரி ஆற்றின் கரையோரத்தில் கோரைக்காட்டில், சூதாட்டம் நடப்பதாக, மாவட்ட எஸ்.பி., பிரவேஷ்குமாருக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின்படி, ப.வேலூர் இன்ஸ்பெக்டர் பூபால் மற்றும் போலீஸார் சம்பந்தப்பட்ட இடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, பொத்தனூர் குருசாமி (42), சக்தி (48), வீரப்பன் (40), வெங்கமேடு சுப்ரமணி (47), பாலசுந்தரம் (65), மீனவர் தெரு தயாளன் (45), முத்துசாமி (30) ஆகிய ஏழு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us