/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/டூவீலர் திருடு போன வழக்கில் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு அபராதம்டூவீலர் திருடு போன வழக்கில் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு அபராதம்
டூவீலர் திருடு போன வழக்கில் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு அபராதம்
டூவீலர் திருடு போன வழக்கில் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு அபராதம்
டூவீலர் திருடு போன வழக்கில் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு அபராதம்
ADDED : ஆக 08, 2011 03:13 AM
நாமக்கல்: டூவீலர் திருடு போன வழக்கில், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு, 5,530 ரூபாய் இழப்பீடுதர, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாமக்கல், தில்லைபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பொன்னுசாமி. அவர், தனது டூவீலரை பணியாளரிடம் கொடுத்து, வீடு பழுது பார்க்க மேஸ்திரியை அழைத்துவர அனுப்பி வைத்தார். பணியாளர், டூவீலரை சந்தைப்பேட்டைபுதூரில் நிறுத்தி விட்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் வண்டியை எடுத்துச் சென்றுவிட்டனர். பல நாட்கள் தேடியும் டூவீலர் கிடைக்கவில்லை. இது குறித்து நாமக்கல் போலீஸில் பொன்னுசாமி புகார் செய்தார். அதை தொடர்ந்து, வண்டிக்கு இன்சூரன்ஸ் செய்திருந்த யுனைடெட் இந்திய இன்சூரன்ஸ் நிறுவனத்திடம், இழப்பீடு தொகை கேட்டு விண்ணப்பித்தார். நுகர்வோர் அஜாக்கிரதையால் திருட்டு போன வாகனத்துக்கு, இன்சூரன்ஸ் இழப்பீடு தரமுடியாது என மறுத்து விட்டனர். இது குறித்து மேல் முறையீடு செய்தும் அதே பதிலே கிடைத்தது. பயனீட்டாளர் சங்கத்தில் புகார் செய்து, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. மனுதாரர் சார்பாக, பயனீட்டாளர் சங்க செயலாளர் சுப்பராயன் வாதாடினார். குறைதீர் மன்றத் தலவர் கிருஷ்ணராஜா, உறுப்பினர் பாலசுப்ரமணியம் ஆகியோர் விசாரணை நடத்தி, 'இன்சூரன்ஸ் நிறுவன வண்டியை இழந்த பயனீட்டாளருக்கு, 5,530 ரூபாய் இழப்பீடு தர வேண்டும். அதை, வழக்கு தொடர்ந்த காலத்தில் இருந்து தொகை தரப்படும் வரை, 6 சதவீத வட்டியுடனும், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 1,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.


