/உள்ளூர் செய்திகள்/சேலம்/கழிவறை தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வரும் மாணவர்கள்கழிவறை தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வரும் மாணவர்கள்
கழிவறை தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வரும் மாணவர்கள்
கழிவறை தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வரும் மாணவர்கள்
கழிவறை தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வரும் மாணவர்கள்
ADDED : ஆக 08, 2011 03:04 AM
பனமரத்துப்பட்டி: 'சேலம் அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், கழிவறையில் உள்ள தண்ணீரை, குழந்தைகள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்' என, தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பனமரத்துப்பட்டி யூனியன், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி குழந்தைகள் குடிநீர் வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கத்தை சேர்ந்த செந்தில்குமார், பனமரத்துப்பட்டி யூனியன் பி.டி.ஓ.,விடம் அளித்த புகார் மனு விபரம்: கெஜ்ஜல்நாயக்கன்பட்டி துவக்கப்பள்ளியில், சத்துணவு சமைக்கவும், குழந்தைகள் குடிக்கவும் குடிநீர் வசதி இல்லை. பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையில் உள்ள தண்ணீரை, குழந்தைகள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். சுகாதாரமற்ற தண்ணீரை சமையல் செய்யவும் பயன்படுத்துகின்றனர். பள்ளிக்கு வெளியே நான்கு ரோடு அருகே உள்ள குடிநீர் பைப்பில் தண்ணீர் பிடிக்கச் செல்லும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி துவக்கப்பள்ளிக்கு, குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


