/உள்ளூர் செய்திகள்/கரூர்/அரசு ஊழியர்கள் இன்சூரன்ஸ் தமிழக அரசு ஏற்க கோரிக்கைஅரசு ஊழியர்கள் இன்சூரன்ஸ் தமிழக அரசு ஏற்க கோரிக்கை
அரசு ஊழியர்கள் இன்சூரன்ஸ் தமிழக அரசு ஏற்க கோரிக்கை
அரசு ஊழியர்கள் இன்சூரன்ஸ் தமிழக அரசு ஏற்க கோரிக்கை
அரசு ஊழியர்கள் இன்சூரன்ஸ் தமிழக அரசு ஏற்க கோரிக்கை
ADDED : ஆக 08, 2011 02:53 AM
கரூர்: அரசு ஊழியர்களின் இன்சூரன்ஸ் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசே ஏற்று நடத்தவேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் இரண்டாவது வட்டக்கிளை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் இரண்டாவது வட்டக்கிளை மாநாடு நேற்று நடந்தது. வட்டத்தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் சாமுவேல் சுந்தர பாண்டியன் துவக்கி வைத்தார். வட்டச் செயலாளர் ஜெயராம், பொருளாளர் நௌசாத் உட்பட பலர் பங்கேற்றனர். மாநாட்டில், காலியாக உள்ள இரண்டு லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். ஏற்கனவே உள்ள ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன் வரவேண்டும். அரசு ஊழியர்களின் இன்சூரன்ஸ் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசே ஏற்று நடத்தவேண்டும். கடந்த ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட ஊதியக்குழு திருத்தத்தில் உள்ள அனைத்து முரண்பாடுகளையும் களைய வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், அவுட் சோர்ஸிங் நியமன முறையினை கைவிட்டு, அனைவரையும் காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


