/உள்ளூர் செய்திகள்/கரூர்/உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம் துவக்கம்உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம் துவக்கம்
உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம் துவக்கம்
உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம் துவக்கம்
உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம் துவக்கம்
ADDED : ஆக 08, 2011 02:52 AM
கரூர்: ''சட்டசபை தேர்தலில் ஆதரவு அளித்ததை போல் வரும் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க., வுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்,'' என கரூரில் நடந்த ரேஷன் கடை திறப்பு விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டுக்கொண்டார்.
கரூர் மாவட்டம் தாந்தோணி பஞ்சாயத்து யூனியன் சின்ன ஆண்டாங்கோவில் சரஸ்வதி நகரில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. ரேஷன் கடையை திறந்து வைத்து, விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க., ஆட்சியில் கரூர் தொகுதியில் குடிநீர் தேவை சரி செய்யப்படவில்லை. ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, அத்தியவாசிய தேவையான குடிநீர் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கரூருக்கு பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் திட்டங்கள் செயல்படுத்த தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட சிறப்பு திட்டங்களை செயல்படுத்த தனி அமைச்சகத்தை முதல்வர் ஜெயலலிதா உருவாக்கி உள்ளார். இதனால் மக்கள் நலத்திட்டங்கள் வேகமாக செயல்படுத்தப்படும். வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் இலவச மிக்ஸி, பேன் மற்றும் கிரைண்டர்கள் உங்கள் வீடு தேடி வரும். கடந்த எம்.பி., தேர்தல், 2006ல் நடந்த சட்டசபை தேர்தல் மற்றும் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வுக்கு கரூர் மக்கள் பெரும் ஆதரவு அளித்தீர்கள். தொடர்ந்து வரும் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க., வுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., காமராஜ், மாவட்ட கலெக்டர் ÷ஷாபனா, டி.ஆர்.ஓ., பிச்சையா, டி.எஸ்.ஓ., ஆதி நாராயணன், ஆர்.டி.ஓ., சாந்தி, வேளாண்மை கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் தீபா சங்கரி, ஒன்றிய கவுன்சிலர் விஜய பாஸ்கர் உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து நரிகட்டியூர் பகுதியில் ரேஷன் கடையை திறந்து வைத்த போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, காதப்பாறை பஞ்சாயத்து அருக்கம்பாளையம் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது ' அருகம்பாளையம் பகுதியில் புதிய சாலை அமைக்க வேண்டும்' என, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அதை கேட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, 'காதப்பாறை பஞ்சாயத்தில் உள்ள குடிநீர் பிரச்சனையை தீர்க்க, காவிரி குடிநீர் வழங்க முதல் கட்டமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிறகு படிப்படியாக ரோடு மற்றும் சாக்கடை வசதிகள் செய்து தரப்படும்' என, உறுதியளித்தார்.


