யானை தாக்கி பலியானவர் குடும்பத்திற்கு நிதியுதவி
யானை தாக்கி பலியானவர் குடும்பத்திற்கு நிதியுதவி
யானை தாக்கி பலியானவர் குடும்பத்திற்கு நிதியுதவி
ADDED : ஆக 07, 2011 06:54 PM
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் யானை தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு, தமிழக அரசு சார்பில் 2.5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், சிங்கோனா என்ற இடத்தில், அப்துல் மஜீத் என்பவரின் மகன் பாபு, கடந்த 5ம் தேதி யானை தாக்கி உயிரிழந்த செய்தியறிந்து துயருற்றேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாபுவின் குடும்பத்திற்கு வனத்துறை மூலம் 1.5 லட்சமும், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 1 லட்சம் ரூபாயும் சேர்த்து, மொத்தம் 2.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.