Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மாயாவதி அரசுக்கு கிடுக்குபிடி: போலி என்கவுன்டரில் முதலிடம்; கொலை வழக்கில் அமைச்சர்

மாயாவதி அரசுக்கு கிடுக்குபிடி: போலி என்கவுன்டரில் முதலிடம்; கொலை வழக்கில் அமைச்சர்

மாயாவதி அரசுக்கு கிடுக்குபிடி: போலி என்கவுன்டரில் முதலிடம்; கொலை வழக்கில் அமைச்சர்

மாயாவதி அரசுக்கு கிடுக்குபிடி: போலி என்கவுன்டரில் முதலிடம்; கொலை வழக்கில் அமைச்சர்

ADDED : ஆக 07, 2011 10:58 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி : ஏற்கனவே உ.பி.யில் நினைவு பூங்கா அமைத்தது தொடர்பாக ரூ.66 கோடியை வீணடித்து விட்டதாக முதல்வர் மாயாவதி மீது மத்திய தணிக்கைக் குழு குற்றம் சாட்டியுள்ள நிலையில், அவரது அமைச்சர் மீதும் கொலை வழக்கு மற்றும் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு சீர்கேடு போன்ற காரணங்களால் மாயாவதி அரசுக்கு நெருக்கடி வலுத்து வருகிறது.

நாட்டில் போலி என்கவுன்டர்கள் நடைபெறும் மாநிலங்களில் உத்திர பி‌ரதேசம் முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் போலி என்கவுன்டர் மூலம் போலீசாரால் சுமார் 120 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் போலி என்கவுன்டர் மூலம் 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பலியானவர்களின் குடும்பத்தினர் தேசிய மனிதஉரிமையகள் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர். 2010-11ம் ஆண்டில் உத்திர பிரதேசத்தில் 40 பேர் போலீஸ் என்கவுன்டர் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளதாக மனிதஉரிமைகள் கழகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று 2008-09 மற்றும் 2009-2010 ஆண்டுகளில் 71 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2008-09ம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டின் ஜூன் மாதம் வரை போலி என்கவுன்டர் குறித்து 369 வழக்குகள் மனிதஉரிமைகள் கழகத்திடம் உள்ளது. இவற்றில் 98 வழக்குகள் மட்டுமே தீர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் 90 வழக்குகள் போலீசாரின் அனுமானத்தின் பேரிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. உத்திர பிரதேசத்தை தொடர்ந்து போலி என்கவுன்டர்கள் அதிகம் நடைபெறும் மாநிலமாக மணிப்பூர் உள்ளது.

மாயாவதி அமைச்சர் மீது கொலை வழக்கு : உத்திர பிரதேச மாநில கால்நடை மற்றும் பாலவளத்துறை அமைச்சர் ஆவாத்பால் சிங் யாதவ் மீது அம்மாநில போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். தனியார்த்துறை பாதுகாப்பு அதிகாரியான சந்தோஷ் ஜூன் 10ம் தேதியன்று சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட நீதிபதி சந்தோஷ் புத்திசாகர் மிஸ்ராவின் உத்தரவின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். உடன் பணிபுரியும் விஜய் வர்மா மற்றும் அவரது மகன் மிதுன் வர்மா ஆகியோரால் சந்தோஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தின் பின்னணியில் அமைச்சர் ஆவாத்பால் இருப்பதாக சந்தோஷின் சகோதர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதே போன்று மேலும் 2 கொலை வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக அமைச்சர் ஆவாத்பால், அவரது சகோதரர் மற்றும் மகன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் கொண்டுவரப்பட்ட லோக் ஆயுக்தா மசோதாவில் ஊழல் புரிந்தவர்கள் பட்டியலிலும் அமைச்சர் ஆவாத்பால் பெயர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us