/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டம்வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டம்
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டம்
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டம்
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 06, 2011 02:18 AM
கடலூர் : வங்கி ஊழியர்களின் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூடப்பட்டிருந்தன.பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குதல், அரசு பங்கை குறைப்பது.
பொதுத்துறை வங்கிகளின் முதலீட்டிற்கு உலக வங்கியிடம் கடன் வாங்குவது. வங்கிகளை இணைப்பது, கண்டேல்வால் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது உட்பட 20 அம்சங்களை நடைபெறும் லோக்சபா கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதனை கண்டித்து வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது.இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் 136 கிளைகள், 26 தனியார் வங்கிகளில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் 1,200 பேரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றதால் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருந்தன. 6 தனியார் வங்கிகளின் கிளைகள் மட்டுமே இயங்கின.தொடர்ந்து கடலூரில் யூகோ வங்கி முன்பாக மாவட்ட தலைவர் ஜோசப் இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணைத் தலைவர் மருதவாணன், மாவட்ட பொதுச் செயலர் பழனிக் குமார், ஜெயராமன், மதுரைவீரன், எழிலேந்தி, சுந்தரம் உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட செயலர் ஸ்ரீதரன் நன்றி கூறினார்.இதேப்போன்று நெய்வேலியில் சந்திரன், பண்ருட்டியில் ராஜசேகரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.