/உள்ளூர் செய்திகள்/கடலூர்/குடிநீரில் கழிவுநீர் கலப்பு : மக்கள் தவிப்புகுடிநீரில் கழிவுநீர் கலப்பு : மக்கள் தவிப்பு
குடிநீரில் கழிவுநீர் கலப்பு : மக்கள் தவிப்பு
குடிநீரில் கழிவுநீர் கலப்பு : மக்கள் தவிப்பு
குடிநீரில் கழிவுநீர் கலப்பு : மக்கள் தவிப்பு
ADDED : ஆக 06, 2011 02:18 AM
சிதம்பரம் : சிதம்பரம் நகராட்சி 1வது வார்டு பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் வருவதால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக தவித்து வருகின்றனர்.சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டில் கடந்த 2 மாதங்களாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி கவுன்சிலர் தியாகராஜன் நகர மன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.குடிநீர் குழாய் சரி செய்யும் வரை நகராட்சி சார்பில் டிராக்டரில் தண்ணீர் வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் இதுவரை 3 முறை மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.கடந்த இரண்டு மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் சிவசண்முகம் தெரு, பழைய புவனகிரி ரோடு, அருந்ததியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதியில் 200 குடும்பங்கள் குடிநீருக்காக அலைந்து வருகின்றனர்.பெண்கள் நீண்ட தூரம் சென்று புறவழிச்சாலையொட்டி உள்ள தனியாருக்கு சொந்தமான கைப்பம்பில் தண்ணீர் பிடித்து வருகின்றனர். இரண்டு மாதங்களாக கண்டு கொள்ளாததால் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த தயாராகி விட்டனர்.