ADDED : ஆக 06, 2011 02:18 AM
காட்டுமன்னார்கோவில் : கடையை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரீசார்ஜ் கூப்பன் திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்தவர் தனு”வேல்.
பஸ் நிலையம் அருகில் பங்க் கடை வைத்துள்ளார். நோட்டு மற்றும் ரீ சார்ஜ் கூப்பன்கள் விற்பனை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் கடையை திறந்த போது பூட்டுகள் உடைக்கப்பட்டு கடையில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரீசார்ஜ் கூப்பன்கள், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள், 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது.திருட்டு ஆசாமி சந்தேகம் வராமல் இருக்க அங்கேயே கொசு வத்தி ஏற்றி தூங்கிவிட்டு பின்னர் திருடிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.