ADDED : ஆக 05, 2011 09:56 PM
ராஜபாளையம்: புதுப்பாளையம் உழவர் மன்றம், விவசாய கூட்டு பொறுப்பு குழு
இணைந்து, விவசாய உறுப்பினர்களின் மகாசபை கூட்டம் ராஜபாளையம் விவசாயிகள்
சங்க அலுவலகத்தில் நடந்தது.நிர்வாகிகள் என்.ஏ.ராமசந்திர ராஜா, முருகேசன்,
பீம ராஜா, ஜெகதீசன், குமரேசன் உட்பட பலர் பேசினர்.
பருத்தி குவிண்டாலுக்கு
5000ரூபாய் விலை நிர்ணயம் செய்து அரசே நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல்
செய்யவேண்டும். கரும்பு வெட்டும் கூலியை ஆலை நிர்வாகம் வழங்கவேண்டும்
என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏ.என்.ராமசந்திரன் நன்றி
கூறினார்.