மில் அபகரிப்பு வழக்கில் 9 பேருக்கு முன்ஜாமின்
மில் அபகரிப்பு வழக்கில் 9 பேருக்கு முன்ஜாமின்
மில் அபகரிப்பு வழக்கில் 9 பேருக்கு முன்ஜாமின்
சென்னை : சேலம் பிரிமியர் மில் அபகரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேருக்கு, சென்னை ஐகோர்ட் முன்ஜாமின் வழங்கியது.
இம்மனுக்களை நீதிபதி ராஜசூர்யா விசாரித்தார். சீனிவாசன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். சேலம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 10 நாட்களுக்குள் ஆஜராகி, முன்ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் என்றும், புலன்விசாரணைக்கு தேவைப்படும் போது போலீஸ் முன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி, நிபந்தனை விதித்தார். முன்னாள் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், எஸ்.துரைசாமி, சி.துரைசாமி ஆகியோர், வரும் 9ம் தேதி சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் சரணடைய வேண்டும்; அவர்களை 11ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்கலாம்; 11ம் தேதி மாலை 5 மணிக்கு சேலம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்; அங்கு முன்ஜாமின் பெறலாம் என நீதிபதி ராஜசூர்யா உத்தரவிட்டுள்ளார்.