/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ஊழியர் பற்றாக்குறையால் ஆர்.டி.ஓ., அலுவலக பணிகள் முடக்கும்ஊழியர் பற்றாக்குறையால் ஆர்.டி.ஓ., அலுவலக பணிகள் முடக்கும்
ஊழியர் பற்றாக்குறையால் ஆர்.டி.ஓ., அலுவலக பணிகள் முடக்கும்
ஊழியர் பற்றாக்குறையால் ஆர்.டி.ஓ., அலுவலக பணிகள் முடக்கும்
ஊழியர் பற்றாக்குறையால் ஆர்.டி.ஓ., அலுவலக பணிகள் முடக்கும்
ADDED : ஆக 04, 2011 11:50 PM
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஊழியர் பற்றாக்குறையால் பணிகள்
முடங்கியுள்ளன. ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில்
தலைமையிடத்தில் தலா ஒரு வட்டார போக்குவரத்து அலுவலகமும், மாவட்டத்திற்குள்
இரண்டு முதல் மூன்று யூனிட் அலுவலகமும் செயல்படுகின்றன. ஊழியர்கள்
பற்றாக்குறை நீடிப்பதால், அன்றாட பணிகள் முடங்கி உள்ளன. பொதுமக்கள்
அலைக்கழிக்கப்படுகின்றனர்.வாகன ஓட்டுனர் கூறுகையில், '' வாகனம் விபத்து
ஆய்வு குறித்து ஆய்வு செய்ய தெரிவித்து பல நாட்கள் ஆன நிலையில் ஊழியர்,
கண்காணிப்பாளர் இல்லை என இரண்டு வாரங்களாக அலைய விடுகின்றனர். கூடுதல்
ஊழியர்களை நியமித்து பணிகளை விரைந்து முடிக்க அரசு முன்வர வேண்டும்,
என்றார்.அலுவலர் ஒருவர் கூறுகையில், ''ராமநாதபுரத்தில் ஆர்.டி.ஓ.,
பணியிடம், நேர்முக உதவியாளர் பணியிடம், நான்கு உதவியாளர் பணியில் மூன்று,
சிவகங்கையில் நேர்முக உதவியாளர், நான்கு உதவியாளர் பணியிடத்தில் மூன்று,
இரண்டு இளநிலை உதவியாளர் பணியிடம், அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக
உள்ளன. விருதுநகரில் நான்கு உதவியாளரில் மூன்று, இளநிலை உதவியாளர்
பணியிடம், அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது.
அனைத்து
அலுவலகங்களிலும் பாதிக்கு மேல் பணியிடங்கள் காலியாக உள்ளதால் இரவு 7 மணி
வரை பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதில் சிலர் விழாக்கள், உடல்
நலக்குறைவு போன்ற காரணங்களால் விடுப்பில் சென்று விட்டால், மொத்த பணியும்
முடங்கி விடுகிறது. மாநில அளவில் போக்குவரத்து அலுவலகங்களில் 25 முதல் 35
சதவிகித பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு விரைந்து ஊழியர் நியமனம் செய்தால்
பொதுமக்களுக்கு சிரமம் இருக்காது,'' என்றார்.
-நமது சிறப்பு நிருபர்-