Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வால்பாறை சோலையாறு அணை நிரம்ப 3 அடி தேவை : கை கொடுக்கிறது தென்மேற்கு பருவமழை

வால்பாறை சோலையாறு அணை நிரம்ப 3 அடி தேவை : கை கொடுக்கிறது தென்மேற்கு பருவமழை

வால்பாறை சோலையாறு அணை நிரம்ப 3 அடி தேவை : கை கொடுக்கிறது தென்மேற்கு பருவமழை

வால்பாறை சோலையாறு அணை நிரம்ப 3 அடி தேவை : கை கொடுக்கிறது தென்மேற்கு பருவமழை

ADDED : ஆக 03, 2011 01:28 AM


Google News
வால்பாறை : பரம்பிக்குளம் பாசனத்திட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும் சோலையாறு அணை நிரம்ப 3 அடி நீர்மட்டமே தேவை உள்ளது.

இதனால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வால்பாறை மலைப்பகுதியில் ஆண்டு தோறும் பெய்துவரும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையை கருத்தில் கொண்டு பரம்பிக்குளம் பாசனத்திட்டத்தின் கீழ் மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, அப்பர்ஆழியாறு, காடம்பாறை அணை கள் கட்டப்பட்டன. சோலையாறு அணை நிரம்பியவுடன் சேடல்டேம் வழியாக பரம்பிக்குளத்திற்கும், காடம்பாறை அணை நிரம்பியவுடன் அப்பர்ஆழியாறு வழியாக ஆழியாறுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இது தவிர காடம்பாறை அணையிலிருந்து சுழற்சிமுறையில் நாள் தோறும் 400 மெகாவாட் மின்சாரமும், சோலையாறு அணையிலிருந்து 70 மெகாவாட் மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது. வால்பாறையில் இந்த ஆண்டு தென்மேற்குப்பருவ மழை ஆரம்பத்தில் வேகமாக பெய்தாலும், கடந்த சிலநாட்களாக மழையின் வேகம் குறைந்து வருகிறது.தொடர்ந்து பெய்துவரும் கன மழையினால் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் சிரபுஞ்சி என்றழைக்கப்படும் மேல்நீராறு(சின்னக்கல்லார்), அக்காமலை, நடுமலை ஆறு, கெஜமுடி டனல், வெள்ளமலை டனல் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அதிக மழைப்பொழிவால் வால்பாறையில் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டு, தற்காலிக தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அதிகாலையில் பனிப்பொழிவும், மாலையில் கடுங்குளிரும் நிலவுகிறது. சோலையாறு அணை நிரம்பும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழையின் வேகம் குறைந்து காணப்படுகிறது. அணை நிரம்ப 3 அடி நீர்மட்டமே உள்ள நிலையில் அணைப்பாதுகாப்பு குறித்து பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வால்பாறையில் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 157.23 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 1,509 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. விநாடிக்கு 1,045 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.'அணை 52 முறை நிரம்பியது': வால்பாறையில் உள்ள சோலையாறு அணை கடந்த 1958ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணை கடந்த 2001ம் ஆண்டில் 2 முறைநிரம்பியது. அதே போல் 2004 மற்றும் 2005ம் ஆண்டுகளில் ஒரு முறையும், 2006ம் ஆண்டில் 5 முறையும், 2007ம் ஆண்டில் 10 முறையும் நிரம்பியது. 2008ம் ஆண்டு ஒரு முறையும், 2009ம் ஆண்டு 6 முறையும் அணை நிரம்பியது. கடந்த ஆண்டு (2010) அணை ஒரு முறை கூட நிரம்பவில்லை. அணை கட்டப்பட்ட நாளிலிருந்து இது வரை 52 முறை அணை நிரம்பியுள்ள நிலையில், ஓரிரு நாளில் அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us