/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/விதி மீறி கட்டுமானப்பணி 6 பேர் மீது வழக்குவிதி மீறி கட்டுமானப்பணி 6 பேர் மீது வழக்கு
விதி மீறி கட்டுமானப்பணி 6 பேர் மீது வழக்கு
விதி மீறி கட்டுமானப்பணி 6 பேர் மீது வழக்கு
விதி மீறி கட்டுமானப்பணி 6 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 03, 2011 01:08 AM
கோத்தகிரி : நீதிமன்ற உத்தரவை மீறி, நீலகிரி மாவட்டத்தில் கட்டுமானப்பணி மேற்கொண்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கோத்தகிரி போலீசார், தலைமறைவாகியுள்ள ஆறு பேரை தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் வெடிவைத்து கற்களை உடைக்கவும், பொக்லைன் மூலம் மலை மற்றும் நிலத்தை சமன் செய்யவும் சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. 'தேயிலை தோட்டங்களை அழித்து விடுதிகள் கட்டுவதை கண்காணிக்க வேண்டும்' என உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட நிர்வாகமும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி, நிலநடுக்க பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தகிரி கேத்ரீன் நீர்வீழ்ச்சி பகுதியில் பாறைகள் வெடி வைத்து உடைக்கப்படுகின்றன. பொக்லைன் மூலம் தோட்டத்தை கரைத்து சமன் செய்து விடுதி கட்டடங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இது குறித்த புகாரின்படி, குன்னூர் ஆர்.டி.ஓ., உள்ளிட்ட வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, நில பங்குதாரர்கள் பெள்ளிராஜ், லட்சுமணன், ராமன் உட்பட ஆறு பேர் மீது கோத்தகிரி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தலைமறைவாகி உள்ளனர். 'விசாரணையில் ஆளும் கட்சியினர் தலையிடக்கூடாது' என முதல்வர் உத்தரவிட்டுள்ளதால், அதிகாரிகளின் நடவடிக்கையில் தொய்வு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நடவடிக்கையால், மாவட்டத்தின் பல இடங்களில் விதிமுறை மீறி கட்டடம் கட்டிய முக்கிய புள்ளிகள் கிலி அடைந்துள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளே காரணம்: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆட்சியின் போது, விதிகளை மதிக்காமல் மாவட்டம் முழுவதும் கட்டடங்கள் புற்றீசல் போல் கட்டப்பட்டு விட்டன. இதற்கு உள்ளாட்சிகளில் பொறுப்பில் இருந்த நிர்வாகிகளும், வருவாய்த்துறை அலுவலர்களுமே காரணம். உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், விதிமுறை மீறிய கட்டடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்தும் முறையான விசாரணை நடத்தால், இன்னும் பல உண்மைகள் வெளிவரும்.


