/உள்ளூர் செய்திகள்/மதுரை/மொபைல் போன் டவர் பேட்டரிகளை திருடிய 4 பேர் கைதுமொபைல் போன் டவர் பேட்டரிகளை திருடிய 4 பேர் கைது
மொபைல் போன் டவர் பேட்டரிகளை திருடிய 4 பேர் கைது
மொபைல் போன் டவர் பேட்டரிகளை திருடிய 4 பேர் கைது
மொபைல் போன் டவர் பேட்டரிகளை திருடிய 4 பேர் கைது
ADDED : ஆக 02, 2011 01:21 AM
மேலூர் : மேலூர் பகுதியில் தொடர்ந்து மொபைல் போன் டவர் பேட்டரிகளை திருடிய நான்கு பேரை திண்டுக்கல் போலீசார் கைது செய்து, திருடிய 40 பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.
மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டி, மேலவளவு அருகில் உள்ள கைலம்பட்டி என இரண்டு இடங்களில் உள்ள தனியார் மொபைல் போன் டவர்களில் வைக்கப்பட்டிருந்த 40 பேட்டரிகள் இரு தினங்களுக்கு முன்பு திருடு போனது. இது குறித்து மேலூர் போலீசார் விசாரித்து வந்த நிலையில், நேற்று திண்டுக்கல் அம்மைநாயக்கனூர் போலீசார் சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை கைது செய்து விசாரித்தனர். அவர்கள் மேலூரில் பேட்டரி திருடியவர்கள் என தெரிய வந்தது. விருதுநகரை சேர்ந்த ஜெயபால் மகன் தினேஷ்(24), தனியார் மொபைல் நிறுவனங்களில் தற்காலிக கான்டிராக்ட் எடுத்து வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் மொபைல் போன் டவர் உள்ள இடங்களில் வைத்துள்ள பொருட்களை பற்றி நன்கு அறிந்துள்ளார். இவரது நண்பர்கள் விருதுநகரை சேர்ந்த முருகன்(26), ராஜா(22), முத்துக் குமார்(24) ஆகியோருடன் சேர்ந்து மேலூர், திண்டுக்கல் பகுதிகளில் பேட்டரிகளை திருடி வந்துள்ளனர். திண்டுக்கல் போலீசில் நான்கு பேரும் பிடிபட்டவுடன் மேலூரில் திருடியதை ஒப்புக் கொண்டு 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள 40 பேட்டரிகளை போலீசார் வசம் ஒப்படைத்தனர்.