ADDED : ஆக 02, 2011 12:54 AM
விழுப்புரம் : தும்பூரில் மகளிர் மன்றத்தினர் மனைப்பட்டா வழங்க கோரி
உண்ணாவிரதம் இருந்தனர்.விழுப்புரம் அடுத்த தும்பூர் அரசு மாணவர் விடுதி
முன் அப்பகுதியைச் சேர்ந்த நேரு மகளிர் மன்றத்தினர் நேற்று காலை 9 மணிக்கு
உண்ணாவிரதத்தை துவக்கினர்.
மன்றத் தலைவி பாஞ்சாலி தலைமையில் பெண்கள் 25
பேர் கலந்து கொண்டனர்.கடந்த 93ம் ஆண்டில் அப்பகுதியில் ஆதி திராவிட
நலத்துறை மூலம் வாங்கப்பட்ட இடத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் 177 பேருக்கு
இலவச வீட்டு மனை வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் சிக்கல் எழுந்ததால்
கோர்ட் வரை பிரச்னை சென்றுள்ளது. வருவாய்த் துறையினர் விதிமுறைகளின் படி
உரியவர்களுக்கு மனைப்பட்டா வழங்க பெண்கள் கோரிக்கை வைத்தனர்.கெடார் சப்
இன்ஸ்பெக்டர் வின்சென்ட்சேவியர், தனிப்பிரிவு ஏட்டு ஜெயச்சந்திரன் மற்றும்
போலீசார் விரைந்து சென்று சமாதானப்படுத்தினர். இதனையடுத்து காலை 10
மணிக்கு உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது.