/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கம்ப்யூட்டர் மயமாகும் அரசு மருத்துவமனைகள்கம்ப்யூட்டர் மயமாகும் அரசு மருத்துவமனைகள்
கம்ப்யூட்டர் மயமாகும் அரசு மருத்துவமனைகள்
கம்ப்யூட்டர் மயமாகும் அரசு மருத்துவமனைகள்
கம்ப்யூட்டர் மயமாகும் அரசு மருத்துவமனைகள்
ADDED : ஆக 01, 2011 11:12 PM
வேடசந்தூர் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் கம்ப்யூட்டர் மயமாக்கும் பணி நடந்து வருகிறது.
மாவட்டத்தில் 12 அரசு மருத்துவமனைகள் உள்ளன. தினமும் வெளி நோயாளிகள் வருகை, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள். மருந்து இருப்பு, ஆய்வுகூடங்கள் ஆகியவற்றின் பணிகள் குறித்து உடனுக்குடன் அறிந்துகொள்ள கம்ப்யூட்டர் மயமாக்கல் பணி நடக்கிறது. அரசு மருத்துவமனைகளில் உள்ள வார்டுகள் தோறும் கம்ப்யூட்டர்கள் நிறுவப்படுகிறது. டாக்டர்கள் நோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சை முதல் அனைத்து நடவடிக்கைகளும் தினமும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட உள்ளது. இவை திண்டுக்கலில் உள்ள மாவட்ட சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்துடன் இணைக்கப்பட உள்ளது. இதனால் மாவட்ட தலைமை மருத்துவமனையிலிருந்தே மாவட்டத்திலுள்ள மற்ற அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் வருகை, மருந்து இருப்பு பற்றிய தகவல்களை அதிகாரிகள் தெரிந்துகொண்டு கண்காணிக்க முடியும். இதனால் மருந்து பற்றாக்குறை, நோயாளிகளுக்கு ஏற்படும் சேவை குறைபாடுகள் ஆகியவற்றை கண்டறிந்து மருத்துவ வசதிகளை சீராக்கவும் வாய்ப்புள்ளது.