/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/போலி துப்பாக்கிகளை கண்டுபிடிக்க.. கூட்டுப்படை போலீசார், வனத்துறையினர் கைகோர்ப்புபோலி துப்பாக்கிகளை கண்டுபிடிக்க.. கூட்டுப்படை போலீசார், வனத்துறையினர் கைகோர்ப்பு
போலி துப்பாக்கிகளை கண்டுபிடிக்க.. கூட்டுப்படை போலீசார், வனத்துறையினர் கைகோர்ப்பு
போலி துப்பாக்கிகளை கண்டுபிடிக்க.. கூட்டுப்படை போலீசார், வனத்துறையினர் கைகோர்ப்பு
போலி துப்பாக்கிகளை கண்டுபிடிக்க.. கூட்டுப்படை போலீசார், வனத்துறையினர் கைகோர்ப்பு
ADDED : ஆக 01, 2011 11:12 PM
திண்டுக்கல் : மலைப்பகுதிகளில் உள்ள லைசென்ஸ் இல்லாத துப்பாக்கிகளை கண்டுபிடிக்க போலீசார், வனத்துறையினர் இணைந்த கூட்டுப்படை அமைக்கப்பட்டுள்ளது.
நத்தம் கரந்தமலை, சிறுமலை, கொடைக்கானல், தாண்டிக்குடி, பன்றிமலை, ஆடலூர், அய்யலூர் என, இம்மாவட்டம் மலைகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு வனவிலங்குகளிடம் பாதுகாப்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பே பலர் துப்பாக்கி லைசென்ஸ் பெற்றுள்ளனர்.
மலைப்பகுதியில் உள்ள எஸ்டேட், தோட்டங்களில் வசிக்கும் சிலர் லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கிகளை வைத்துள்ளனர். இதை பயன்படுத்தி விலங்குகளை வேட்டையாடுவது; தகராறு ஏற்படும் போது சுடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் கரந்தமலை, சிறுமலை அடிவாரம் பகுதியில் சில வாலிபர்கள் பலியாகியுள்ளனர். சிறுமலைப்பகுதியில் ஒருவர், துப்பாக்கியை பயன்படுத்த தெரியாமல் வெடித்து பலியானார். இந்த வழக்கு பாலமேடு போலீசார் வழக்குபதிவு செய்து, தற்போது திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.
லைசென்ஸ் இல்லாத துப்பாக்கிகளை கண்டுபிடிக்க போலீசாரால் மட்டும் முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பல முறை போலீசார் எச்சரித்தும் யாரும் செவிசாய்க்கவில்லை. இதனால் போலீஸ், வனத்துறை இணைந்து செயலில் இறங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சந்திரசேகரன் எஸ்.பி., கூறியதாவது: மலைப்பகுதியில் லைசென்ஸ் இல்லாத துப்பாக்கிகளை முறையாக போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்கப்பட வேண்டும். துப்பாக்கி வைத்திருப்போரை கண்டுபிடிக்க கூட்டுப்படை அமைக்கப்படும். துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.