/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை கோர்ட்டில் "டிஜிட்டல் லைப்ரரி'கோவை கோர்ட்டில் "டிஜிட்டல் லைப்ரரி'
கோவை கோர்ட்டில் "டிஜிட்டல் லைப்ரரி'
கோவை கோர்ட்டில் "டிஜிட்டல் லைப்ரரி'
கோவை கோர்ட்டில் "டிஜிட்டல் லைப்ரரி'
ADDED : ஆக 01, 2011 10:18 PM
கோவை : சட்டப் பிரிவுகளை தெரிந்துகொள்ளவும், சுப்ரீம்கோர்ட், ஐகோர்ட் தீர்ப்புகளை அடுத்த நாளே அறிந்து கொள்ளவும் கோவை கோர்ட் வளாகத்தில் 13 லட்சம் ரூபாய் செலவில் 'டிஜிட்டல் லைப்ரரி' அமைக்கப்படுகிறது.
கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் வக்கீல்களின் வசதிக்காக, ஏ.சி.,வசதியுடன் சட்ட நூலகம் உள் ளது.
தினமும் நூற்றுக் கணக்கான வக்கீல்கள் இந்நூலகத்தை பயன்படுத்துகின்றனர். இச்சூழலில், கோவை வக்கீல்கள் சங்க அலுவலக வளாகத்தில் 13 லட்சம் ரூபாய் செலவில் 'டிஜிட்டல் லைப்ரரி' அமைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை வக்கீல்கள் சங்க தலைவர் நந்தகுமார், செயலாளர் ரிச்சர்ட் பொருளா ளர் விஜயராகவன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களின் ஈடுபட்டுள்ளனர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அனைத்து பிரிவுகளும், உட்பிரிவுகளும் 'சிடி'க்களில் பதிவு செய்யப்பட்டு, வக்கீல்களின் பயன்பாட்டுக்கு வைக்கப்படுகின்றன. சென்னை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 50 ஆண்டு காலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளும் சிடிக்களாக வைக்கப்படுகின்றன. இந்த 'சிடி'க்களை பயன்படுத்த ஐந்து கம்ப்யூட்டர்கள் பொருத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் சட்டப்பிரிவுகளில் ஏற்படும் சந்தேகம், ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் பார்த்து வக்கீல்கள் தங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். மேலும், சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட்களில் வழங்கப்படும் தீர்ப்புகளை, அடுத்த நாளே அறிந்து கொள்ளும் வகையில் 'ஆன்லைன்' வசதி ஏற்படுத்தப்படுகிறது. பல்வேறு வசதிகளுடன் கூடிய டிஜிட்டல் லைப்ரரியை வரும் 13ம் தேதி, சென்னை ஐகோர்ட் நீதிபதி திறந்து வைக்க உள்ளார் என வக்கீல் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.