தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
ADDED : ஆக 01, 2011 11:42 AM
சென்னை : திமுக வினர் மீது பொய் வழக்கு போட்டு வரும் தமிழக அரசை கண்டித்து திமுக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் மற்றும் திமுக முன்னாள் அமைச்சரகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக பொருளாளர் ஸ்டாலினும் கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது அவர் கூறியதாவது : திமுக வின் அறப்போருக்கு அனுமதி மறுக்கப்பட்டது கண்டனத்திற்குரியது; அதிமுக வின் இது போன்ற நடவடிக்கை தொடர்ந்தால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்; திமுக ஆட்சியில் அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.