UPDATED : ஆக 01, 2011 09:21 AM
ADDED : ஆக 01, 2011 09:11 AM
சென்னை : திமுக., வினர் மீது பொய் வழக்கு போட்டு வரும் தமிழக அரசை கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
சென்னையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆர்ப்பாட்டம் நடத்த சில இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டிருந்த போதும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த திமுக வினர் திட்டமிட்டுள்ளனர்.