/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வாகனங்களில் அதிகரிக்கும் ஆளுங்கட்சி நம்பர் பிளேட் தண்டிக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்வாகனங்களில் அதிகரிக்கும் ஆளுங்கட்சி நம்பர் பிளேட் தண்டிக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்
வாகனங்களில் அதிகரிக்கும் ஆளுங்கட்சி நம்பர் பிளேட் தண்டிக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்
வாகனங்களில் அதிகரிக்கும் ஆளுங்கட்சி நம்பர் பிளேட் தண்டிக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்
வாகனங்களில் அதிகரிக்கும் ஆளுங்கட்சி நம்பர் பிளேட் தண்டிக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்
ADDED : ஆக 01, 2011 02:46 AM
ஈரோடு:அ.தி.மு.க., கட்சிக்கொடி, முதல்வர் படத்துடன் கூடிய ஸ்டிக்கர்களை,
டூவீலர், ஆட்டோ மற்றும் கார்களில் ஒட்டி வலம் வருவது அதிகரித்துள்ளது.
இவர்களை தண்டிக்க முடியாமல் போலீஸாரும் திணறுகின்றனர்.
ஈரோடு மாநகரில் மக்கள் தொகை பெருக்கத்தால், நாளுக்கு நாள் வாகனங்களின்
எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கேற்ப ரோடுகள் விரிவாக்கம்
செய்யப்படவில்லை. போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் வாடிக்கையான
ஒன்றாக மாறிவிட்டது. போக்குவரத்து போலீஸாரும், விபத்துக்களை தடுக்கும்
நோக்கில், ஸ்பீடு பிரேக்கர்கள், ஆங்காங்கே, வாகன சோதனைகளில் ஈடுபட்டு
வருகின்றனர்.
ஆனால், இதுபோன்ற வாகன சோதனையின் போது, போலீஸாரிடம் பிடிபடாமல் இருக்க,
டூவீலர், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் நூதன வழியை கையாண்டு
வருகின்றனர். தமிழகத்தில் ஆட்சி மாறினால், ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள்
போல, தங்களது டூவீலர், ஆட்டோ, கார் போன்றவற்றில், கட்சி சின்னம், கொடி,
முதல்வர் படங்கள் கொண்ட ஸ்டிக்கர்களை வாங்கி, நெம்பர் பிளேட்டில்
ஒட்டிக்கொள்கின்றனர்.
கடந்த தி.மு.க., ஆட்சியில், அப்போதைய முதல்வர் கருனாநிதி, ஸ்டாலின்,
உதயசூரியன் சின்னம், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா பட ஸ்டிக்கர்களை வாங்கி
நெம்பர் பிளேட்களில் ஒட்டி வலம் வந்தனர். ஆட்சி மாற்றத்துக்கு பின்,
தி.மு.க., ஸ்டிக்கர்கள் கானாமல் போயிற்று. தற்போது, முதல்வர் ஜெயலலிதா
படம், இரட்டைஇலை சின்னம் ஆகியவை அதிகப்படியாக வாகனங்களில்
ஒட்டப்பட்டுள்ளது.இதுபோன்ற வாகனங்களில் வலம் வருபவர்கள், போலீஸார் நடத்தும்
வாகன சோதனையின் போது, நிற்பதில்லை.
இரவில் மது அருந்தி விட்டு வலம்
வருபவர்களும், இத்தகைய ஸ்டிக்கர் உதவியுடன் தப்பி விடுகின்றனர்.அதையும்
மீறி போலீஸார் வண்டியை நிறுத்தினால், அமைச்சர் அல்லது உள்ளூர்
அரசியல்வாதிகள் பெயரைக் கூறி, போலீஸாரை மிரட்டுகின்றனர். அ.தி.மு.க.,
ஆட்சியில், சட்டம் ஒழுங்கை காத்திட, போலீஸாரின் கை கட்டுகள்
அவிழ்க்கப்படும் என கூறுவர். ஆனால், அதையும் மீறி, அ.தி.மு.க., ஸ்டிக்கரை
தவறாக பயன்படுத்தி, தப்பிக்க நினைப்பவர்களை கண்டுபிடித்து எப்படி
தண்டிப்பது என, தெரியாமல், போலீஸார் திணறி வருகின்றனர்.