/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/அம்பாசமுத்திரத்தில் பைபாஸ் ரோடு பென்ஷனர்கள் சங்கம் வலியுறுத்தல்அம்பாசமுத்திரத்தில் பைபாஸ் ரோடு பென்ஷனர்கள் சங்கம் வலியுறுத்தல்
அம்பாசமுத்திரத்தில் பைபாஸ் ரோடு பென்ஷனர்கள் சங்கம் வலியுறுத்தல்
அம்பாசமுத்திரத்தில் பைபாஸ் ரோடு பென்ஷனர்கள் சங்கம் வலியுறுத்தல்
அம்பாசமுத்திரத்தில் பைபாஸ் ரோடு பென்ஷனர்கள் சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஆக 01, 2011 02:06 AM
அம்பாசமுத்திரம் : அம்பாசமுத்திரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச் சாலை அமைக்க வேண்டுமென பென்ஷனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.அம்பாசமுத்திரத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க 15வது ஆண்டு நிறைவு விழாவும், பேரவை கூட்டமும் நடந்தது.
சங்க தலைவர் செல்லப்பா தலைமை வகித்தார். இணை செயலாளர் ஆண்டி திருக்குறள் வாசித்தார். செயலாளர் சாலமோன் ராஜ் ஆண்டறிக்கையும், பொருளாளர் சிவராமன் நிதி நிலை அறிக்கையையும் வாசித்தனர்.முன்னாள் கலெக்டர் லட்சுமிகாந்தன் பாரதி, அம்பாசமுத்திரம் உதவி கருவூலக அலுவலர் வால சுப்பிரமணியன், எக்ஸலண்ட் பள்ளி நிர்வாகி ருக்மணி சாந்தா, புரவலர் பாண்டியராஜ் ஐசக், மண்டல தலைவர் சுப்பிரமணியன் பேசினர்.அரசு ஒரு நபர் குழு அறிக்கையை விரைந்து பெற்று, அதனடிப்படையில் அரசாணையை பிறப்பிக்க வேண்டும். அம்பாசமுத்திரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முகமாக புறவழி சாலை அமைக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பேரவை துணை தலைவர் பழனியப்பன் நன்றி கூறினார்.