கல்வி கடன் வழிகாட்டும்மையம் திறப்பு
கல்வி கடன் வழிகாட்டும்மையம் திறப்பு
கல்வி கடன் வழிகாட்டும்மையம் திறப்பு
ADDED : ஆக 01, 2011 02:06 AM
திருநகர்:விருதுநகர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட திருநகரில் கல்விக்கடன்
இலவச வழிகாட்டும் ஆலோசனை மையத் திறப்பு விழா நடந்தது.இதில் மாணிக்தாகூர்
எம்.பி., பேசுகையில், ''2009வரை கல்விக்கடன் குறித்து, மக்களிடம்
விழிப்புணர்வு இல்லை.
தொகுதியில் இதுவரை 18 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 8
ஆயிரத்து 548 மாணவர்களுக்கு கடன் கிடைக்க உதவி செய்யப்பட்டது. இந்த ஆண்டு
10 மாணவர்களுக்கு உதவி செய்ய உள்ளோம். கடன் பெற தகுதி இல்லை, ஆவணங்கள்
இல்லை எனக்கூறி, சில வங்கியில் கடன் கொடுக்க மறுக்கப்படுவதால், அரசுக்கு
அவப்பெயர் ஏற்படுகிறது. மைய பொறுப்பாளர்கள், கல்வி கடன் கேட்பவர்களுக்கு
பெற்றுத்தருவது கடமையாகும்,'' என்றார்.உலக வரை படத்தில் நாடுகளை
சுட்டக்காட்டுவதில் சாதனை புரிந்த, சிறுவன் முகமதுஆசிக், மையத்தை திறந்து
வைத்தார். காங்., மாவட்ட தலைவர் தேவராஜன், வட்டார தலைவர் சுப்பிரமணியன்,
பொதுச் செயலாளர் மகேந்திரன், நிர்வாகிகள் மலைராஜன், மலைச்சாமி, ராஜ்குமார்,
அன்னக்கொடி கலந்து கொண்டனர்.