/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கருப்பாநதி அணை, கால்வாய்களில் புனரமைப்பு பணி விரைவில் துவங்கும்கருப்பாநதி அணை, கால்வாய்களில் புனரமைப்பு பணி விரைவில் துவங்கும்
கருப்பாநதி அணை, கால்வாய்களில் புனரமைப்பு பணி விரைவில் துவங்கும்
கருப்பாநதி அணை, கால்வாய்களில் புனரமைப்பு பணி விரைவில் துவங்கும்
கருப்பாநதி அணை, கால்வாய்களில் புனரமைப்பு பணி விரைவில் துவங்கும்
ADDED : ஆக 01, 2011 01:59 AM
கடையநல்லூர் : கடையநல்லூர் கருப்பாநதி அணையில் புரனமைப்பு பணிகளை மேற்கொள்ள
பொதுப்பணித்துறையிடம் வலியுறுத்தியிருப்பதாகவும், இந்த பணிகள் விரைவில்
துவங்கும் எனவும் தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர்
செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.கடையநல்லூர் பகுதியில் விவசாய
நிலங்களுக்கு பிரதான அணையாக கருப்பாநதி அணை விளங்கி வருகிறது.
இந்த அணையின்
கீழ் 7 கால்வாய்களும், சிறு, சிறு அணைக்கட்டுகளும் அமைந்துள்ளன. 72
குளங்களுக்கு அணையிலிருந்து தண்ணீர் அனுப்பபட்டு வருகிறது. சுமார் 8 ஆயிரம்
ஏக்கர் பிசான சாகுபடி கருப்பாநதி அணையின் கீழ் பயன்பெறும் வகையில்
அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கருப்பாநதி அணைக்கு உட்பட்ட கடைமடை
குளங்களுக்கு பருவமழை காலங்களில் சீராக தண்ணீர் செல்லவில்லை எனவும்,
கருப்பாநதி அணையினை உலக வங்கி நிதியுதவி பெற்று புரனமைப்பு பணிகள்
மேற்கொள்ள வேண்டுமென பாசன விவசாயிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
கருப்பாநதி அணை புரனமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு உரிய ஏற்பாடு
செய்யப்படுமென தேர்தலின் போது விவசாயிகளுக்கு செந்தூர்பாண்டியன் அளித்த
வாக்குறுதியின்படி தற்போது அதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டு
வருகின்றன.இதுகுறித்து அமைச்சர் செந்தூர்பாண்டியன் கூறுகையில், ''சுமார் 8
ஆயிரம் ஏக்கர் சாகுபடி பயன்பெற்று வரும் வகையில் கருப்பாநதி அணை
அமைக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு மட்டுமின்றி கடையநல்லூர் நகராட்சி
பகுதிகளில் குடிநீர் தரும் வகையில் அமைந்துள்ள கருப்பாநதி அணையில்
புரனமைப்பு பணிகள் மேற்கொள்ள விவசாயிகள் வலியுறுத்தியதையடுத்து, தற்போது
அணையினை சீரமைத்து கால்வாய்கள் பகுதிகளில் புரனமைப்பு பணிகள் மேற்கொள்ள
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. உரிய
ஏற்பாடுகள் செய்து தருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த பணிகள் விரைவில் துவங்கும்'' என்றார்.