ADDED : ஆக 01, 2011 01:30 AM
செஞ்சி : செஞ்சி தாலுகா வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமும் மற்றும் மகா தீபாராதனையும் நடந்தது.
இரவு 11 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.விழாவை முன்னிட்டு இசைக் கச்சேரி, பட்டி மன்றம் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை தலைவர் புண்ணியமூர்த்தி, ஊராட்சி தலைவர் கன்னியப்பன் உட்பட கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.