/உள்ளூர் செய்திகள்/மதுரை/இரவு நேரத்தில் திகிலூட்டும் ரேஸ்கோர்ஸ் மைதானம்இரவு நேரத்தில் திகிலூட்டும் ரேஸ்கோர்ஸ் மைதானம்
இரவு நேரத்தில் திகிலூட்டும் ரேஸ்கோர்ஸ் மைதானம்
இரவு நேரத்தில் திகிலூட்டும் ரேஸ்கோர்ஸ் மைதானம்
இரவு நேரத்தில் திகிலூட்டும் ரேஸ்கோர்ஸ் மைதானம்
ADDED : ஜூலை 31, 2011 02:43 AM
மதுரை:மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் பின்புற பகுதி, சமூக விரோதிகளின்
இரவுநேர புகலிடமாக மாறிவருகிறது.மைதானத்தின் பின்புறமுள்ள மெயின் ரோட்டின்
நடைமேடை மேலே ஏறி, எளிதாக உள்ளே வருகின்றனர் சமூக விரோதிகள்.
சுவரையொட்டிய
உள்பகுதியில் இதற்காக நிரந்தர மணல் மேடு அமைத்துள்ளனர். போலீசார் இரவு நேர
ரோந்து வரும் போது, இப்பகுதியில் திரியும் இவர்கள், மைதானத்தின் உள்ளே
குதிக்கின்றனர்.விடிய விடிய போதை ஏற்றிக் கொண்டு, பாட்டிலை அங்கேயே
விடுகின்றனர். சிகரெட் துண்டுகள் ஏராளமாக கிடக்கிறது.கண்ணாடி துண்டுகள்
சிதறி கிடக்கின்றன. காலையில் மாணவர்கள் பயிற்சி பெறும் போது, விழும் பந்தை
எடுக்கச் சென்றால் காலில் காயம் ஏற்படுகிறது. இப்பகுதி முழுதும் இருளாக
இருப்பதால், உள்ளே யார் இருக்கின்றனர் என தெரியாது. மைதானத்திற்கு ஒரு
காவலாளி மட்டுமே இருப்பதால், சமூகவிரோதிகளுக்கு வசதியாக உள்ளது. போலீசார்
ரோந்து வரும் போது மைதானத்தின் பின்புற பகுதியையும் சோதனையிட வேண்டும்.