/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பள்ளிகள் முன் தி.மு.க., போராட்டம்: மாவட்டத்தில் 152 பேர் கைதுபள்ளிகள் முன் தி.மு.க., போராட்டம்: மாவட்டத்தில் 152 பேர் கைது
பள்ளிகள் முன் தி.மு.க., போராட்டம்: மாவட்டத்தில் 152 பேர் கைது
பள்ளிகள் முன் தி.மு.க., போராட்டம்: மாவட்டத்தில் 152 பேர் கைது
பள்ளிகள் முன் தி.மு.க., போராட்டம்: மாவட்டத்தில் 152 பேர் கைது
ADDED : ஜூலை 30, 2011 12:54 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் சமச்சீர் கல்வியை வலியுறுத்தி பள்ளிகளுக்கு முன் போராட்டம் நடத்த முயன்ற தி.மு.க., வினர் 152 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவர்களை திரட்டி தி.மு.க., வினர் நேற்று போராட்டம் நடத்த முயன்றனர். மாவட்டத்திலுள்ள 444 பள்ளிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ரோந்து சென்று பள்ளிகளை கண்காணித்தனர். வழக்கமான ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை இருந்ததால் பிரச்னையின்றி பள்ளிகள் இயங்கியது. விழுப்புரத்தில் டவுன் டி.எஸ்.பி., சேகர் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். பள்ளிகளில் போலீஸ் நின்றிருந்ததால் போராட்டம் நடத்த வந்த தி.மு.க.,வினர் அமைதியாக திரும்பினர். முன்னாள் அமைச்சர் பொன்முடி கட்சி நிர்வாகிகளை அழைத்து'டோஸ்' விட்டதையடுத்து முற்பகல் 11 மணிக்கு நகர செயலாளர் பாலாஜி தலைமையில் நகராட்சிப் பள்ளி அருகே திரண்ட தி.மு.க., வினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர். திருக்கோவிலூரில் அரச பள்ளி முன் நோட் டீஸ் கொடுத்த ஒன்றிய செயலாளர் தங்கம், நகர செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர். அரகண்டநல்லூரில் பேரூராட்சி துணைத் தலைவர் அன்பு தலைமையில் 10 பேரும், ரிஷிவந்தியத்தில் முன்னாள் நகர செயலாளர் பாக்கியராஜ் உட்பட 10 பேரும் கைது செய்யப்பட்டனர். உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவர்களை தடுத்து கோஷம் எழுப்பிய மாஜி எம்.எல்.ஏ., திருநாவுக்கரச, ஒன்றிய சேர்மன் சின்னையன் உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர். எலவனாசூர்கோட்டையில் மாவட்ட பிரதிநிதி கலியமூர்த்தி தலைமையில் 10 பேரும், எடைக்கல்லில் 10 பேரும் கைது செய்யப்பட்டனர். செஞ்சியில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற மாவட்ட அவைத் தலைவர் மஸ்தான், மாஜி எம்.எல்.ஏ., கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், அண்ணாதுரை, நகர செயலாளர் காஜாநசீர் உள்ளிட்ட 22 பேர் கைது செய்யப்பட்டனர். அவலூர்பேட்டையில் மாலை 4 மணிக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் 38 பேர் போராட்டம் செய்ய முயன்றதால் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில் கைதான 152 பேர் மீதும் வழக்குப் பதிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.