/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கள்ளக்குறிச்சியில் விரைவு நீதிமன்றம் துவக்க விழாகள்ளக்குறிச்சியில் விரைவு நீதிமன்றம் துவக்க விழா
கள்ளக்குறிச்சியில் விரைவு நீதிமன்றம் துவக்க விழா
கள்ளக்குறிச்சியில் விரைவு நீதிமன்றம் துவக்க விழா
கள்ளக்குறிச்சியில் விரைவு நீதிமன்றம் துவக்க விழா
ADDED : ஜூலை 30, 2011 12:49 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் விரைவு நீதிமன்றம் துவக்க விழா நேற்று நடந்தது.
மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி தியாகராஜமூர்த்தி தலைமை தாங்கி பெயர் பலகையை திறந்து வைத்தார். ஆர்.டி.ஓ., (பொறுப்பு) வரலட்சமி, வக்கீல் சங்க தலைவர் வெங்கடாசலம், செயலாளர் அருண் பிரசாத் முன்னிலை வகித்தனர். தலைமை குற்றவியல் நீதிபதி ஹேமலதா டேனியல் வரவேற்றார். கலெக்டர் மணிமேகலை, டி.ஆர்.ஓ., வெங்கடாசலம் வாழ்த்துரை வழங்கினர். கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிபதி கலைப்பொன்னி, மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகள் வீரணன், செந்தில்குமார் ராஜவேல், விரைவு நீதிமன்ற நீதிபதி மான்விழி, மாவட்ட நீதிபதி (பயிற்சி) நந்தக்குமார், தாசில்தார் வைகுண்டவரதன், பி.ஆர்.ஓ., லிங்கம் மற்றும் வக்கீல்கள், கோர்ட் அலுவலர்கள் கலந்து கொண்டனர். சார்பு நீதிமன்ற நீதிபதி சீத்தாராமன் நன்றி கூறினார்.