/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கோவில்பட்டியில் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைதுகோவில்பட்டியில் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது
கோவில்பட்டியில் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது
கோவில்பட்டியில் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது
கோவில்பட்டியில் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : ஜூலை 30, 2011 12:48 AM
கோவில்பட்டி:கோவில்பட்டி உட்பட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் ஏராளமான
வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, கோவில்பட்டி
மந்தித்தோப்பு ரோடு போஸ் நகரை சேர்ந்த மாணிக்கராஜா(31). இவர்மீது
கோவில்பட்டி, நாலாட்டின்புத்தூர், கழுகுமலை, கயத்தாறு உட்பட்ட போலீஸ்
ஸ்டேஷன்களில் கொள்ளை, கொலை முயற்சி உட்பட ஏராளமான வழக்குகள்
பதிவாகியுள்ளது. இந்நிலையில் கடந்த 2ம் தேதி வக்கீல் சம்பத்குமார் என்பவரை
வெட்ட முயற்சி செய்ததாக மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து
குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்பி., பரிந்துரையின் பேரில்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செல்வராஜ் மாணிக்கராஜாவை குண்டர் தடுப்பு
சட்டத்தில் கைது செய்து ஓராண்டு சிறையிலடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில்
கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி மாணிக்கராஜாவை கைது
செய்து பாளை மத்தியசிறையில் ஒப்படைத்தார்.