ADDED : ஜூலை 29, 2011 11:33 PM
மத்தூர்: மத்தூர் அரசு மருத்வமனையில், ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ., மனோரஞ்சிதம் நாகராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ., மனோரஞ்சிதம் நாகராஜ், மத்தூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மருத்துவமனையில் குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை
என, நோயாளிகள் புகார் தெரிவித்தனர்.மேலும், டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில்லை எனவும், மத்தூரில் இருந்த, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை பர்கூருக்கு மாற்றி விட்டதால் விபத்து ஏற்படும் போது அதிக உயிரிழப்பு ஏற்படுவதாகவும் நோயாளிகள் புகார் தெரிவித்தனர்.மருத்துவமனையில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என, எம்.எல்.ஏ., உறுதியளித்தார். ஆய்வின்போது, மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் பியாரேஜான், தொகுதி செயலாளர் நாகரத்தினம், பஞ்சாயத்து தவைர் கமலநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.