/உள்ளூர் செய்திகள்/கரூர்/பழுதடைந்த நிழற்குடை குப்பம் பயணிகள் அவதிபழுதடைந்த நிழற்குடை குப்பம் பயணிகள் அவதி
பழுதடைந்த நிழற்குடை குப்பம் பயணிகள் அவதி
பழுதடைந்த நிழற்குடை குப்பம் பயணிகள் அவதி
பழுதடைந்த நிழற்குடை குப்பம் பயணிகள் அவதி
ADDED : ஜூலை 29, 2011 11:27 PM
க.பரமத்தி: குப்பம் பஸ் ஸ்டாப்பில் அமைந்துள்ள பயணியர் நிழற்குடை மேற்கூரை கடந்த மூன்று ஆண்டாக பழுதடைந்து கம்பி மட்டும் காட்சியளிக்கும் நிழற்குடையை மாறியுள்ளது.க.பரமத்தி - நொய்யல் தேசிய நெடுஞ்சாலையில் குப்பம் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை அமைந்துள்ளது.
இவை கடந்த 1993ம் ஆண்டு முன்னாள் கரூர் எம்.பி., முருகேசனின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கட்டிடம் கடந்த 18 ஆண்டாக பராமரிக்காமல் உள்ளது.நாள்தோறும் இந்த நிழற்குடையில் இருந்து குப்பம், நடுப்பாளையம், ஆண்டிசங்கிலிபாளையம், சக்கராப்பாளையம், காங்கேயம்பாளையம், அத்திப்பாளையம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பல மணி நேரம் காத்திருந்து பஸ்ஸில் ஏறி செல்வது வழக்கம்.
அத்துடன் நூற்றுக்கணக்கான பயணிகள் வெளியூர் செல்ல இந்த பஸ் ஸ்டாப்பில் தான் ஏறி செல்ல வேண்டியுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த நிழற்குடை கடந்த மூன்று ஆண்டாக பராமரிக்காததால் மேல்தளம் பெயர்ந்து முற்றிலும் கம்பி மட்டும் காட்சியளிக்கிறது. அத்துடன் சுவரும் வெடித்துள்ளது.'மழைக்காலம் தொடங்கியுள்ளதால் கட்டிடம் விழுந்து விபத்தை ஏற்படுத்தும். என வே, விபத்து ஏற்படும் முன் புதிய நிழற்குடை அமைக்க பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.