/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/உள்ளாட்சி தேர்தல் ஜூரம் ஆட்டிப்படைக்கும் "செக் பவர்'உள்ளாட்சி தேர்தல் ஜூரம் ஆட்டிப்படைக்கும் "செக் பவர்'
உள்ளாட்சி தேர்தல் ஜூரம் ஆட்டிப்படைக்கும் "செக் பவர்'
உள்ளாட்சி தேர்தல் ஜூரம் ஆட்டிப்படைக்கும் "செக் பவர்'
உள்ளாட்சி தேர்தல் ஜூரம் ஆட்டிப்படைக்கும் "செக் பவர்'
ADDED : ஜூலை 29, 2011 11:06 PM
குஜிலியம்பாறை : உள்ளாட்சி தேர்தலுக்கு இரு மாதங்களே உள்ள நிலையில், கட்சியினர் இப்போதே, திண்ணை பிரசாரம் துவக்கி விட்டனர்.உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு, 2011 அக்., 25 ல், பதவிக்காலம் முடிகிறது.
இதன்படி, 10 மாநகராட்சி, 98 நகராட்சி, 50 மூன்றாம் நிலை நகராட்சி, 561 பேரூராட்சி, 29 மாவட்ட ஊராட்சி, 385 ஊராட்சி ஒன்றியம், 12 ஆயிரத்து 618 கிராம ஊராட்சிகளுக்கு புதிய பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் போட்டியிட திட்டமிட்டுள்ள பலர், இப்போதே பணிகளை துவக்கி விட்டனர். ஊர் பிரமுகர்கள், பொது மக்களை சந்தித்தல், எதிர்ப்பாளர்களை சரிக்கட்டுவது, கோயில் விழாக்களுக்கு நன்கொடை என, பணிகள் ஜரூராக நடக்கின்றன. இதில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டி கடுமையாக உள்ளது. இதனால் செல்வாக்கை நிலைநாட்ட, திண்ணை பிரசாரத்தை துவக்கி விட்டனர்.சின்னாளபட்டி:உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மை பதவிகளை கைப்பற்ற அ.தி.மு.க., வினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகளை துவக்கியுள்ளனர். இதில் ஊராட்சி தலைவர் பதவியை தான், அதிகமானோர் குறிவைத்துள்ளனர். வேறு சிலர், முதலில் ஊராட்சி உறுப்பினர் பதவியை பிடித்து, பின், துணைத்தலைவர் பதவியை கைப்பற்றும் கனவுடன் இருக்கின்றனர். இந்த இரு பதவிகளும், அரசு நிதியை நேரடியாக கையாளும் (செக் பவர்) அதிகாரம் உள்ளவை என்பதே, இப்போட்டிக்கு காரணம்.