Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"நிலநடுக்க தடுப்பு' கருத்தரங்கு

"நிலநடுக்க தடுப்பு' கருத்தரங்கு

"நிலநடுக்க தடுப்பு' கருத்தரங்கு

"நிலநடுக்க தடுப்பு' கருத்தரங்கு

ADDED : ஜூலை 28, 2011 09:24 PM


Google News
கோவை : 'நிலநடுக்க தடுப்பு வடிவமைப்பு' குறித்த கருத்தரங்கு, வி.எல்.பி., ஜானகியம்மாள் இன்ஜினியரிங், தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்தது.

கருத்தரங்கில், நில நடுக்க இன்ஜினியரிங் துறை சார்ந்த மாணவ, மாணவியர் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்தனர். சென்னை அண்ணா பல்கலை பேரிடர் மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு மைய தலைவர் சாந்தகுமார், கோவை பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் ஜெயகோபால், ஜி.சி.டி., கல்லூரி கட்டடவியல் துறை விரிவுரையாளர் அருமைராஜ், ஜெ.சி.டி., இன்ஜினியரிங் தொழில்நுட்பக் கல்லூரி கட்டடவியல் துறைத்தலைவர் சுவாமி ஆகியோர் 'நிலநடுக்கத்தை தாங்கும் கட்டுமானத்தின் முக்கியத்துவம், அதன் கட்டுமானம், இந்திய தர நிர்ணய கழகத்தின் பரிந்துரை மற்றும் வழிமுறைகள்' குறித்து மாணவ, மாண வியருக்கு விளக்கினர். வி.எல்.பி., ஜானகியம்மாள் இன்ஜி., தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் சவுந்திரராஜன், கட்டடவியல் துறை தலைவர் வெங்கடசுப்ரமணி, பேராசிரியர் முத்துபிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us