Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பஸ் ஸ்டாப்பில் உள்ள டிரான்ஸ்ஃபார்மரால்அபாயம்: இடமாற்றம் செய்ய கோரிக்கை

பஸ் ஸ்டாப்பில் உள்ள டிரான்ஸ்ஃபார்மரால்அபாயம்: இடமாற்றம் செய்ய கோரிக்கை

பஸ் ஸ்டாப்பில் உள்ள டிரான்ஸ்ஃபார்மரால்அபாயம்: இடமாற்றம் செய்ய கோரிக்கை

பஸ் ஸ்டாப்பில் உள்ள டிரான்ஸ்ஃபார்மரால்அபாயம்: இடமாற்றம் செய்ய கோரிக்கை

ADDED : ஜூலை 28, 2011 03:08 AM


Google News
பள்ளிபாளையம்: 'அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், பள்ளிபாளையம் பஸ் ஸ்டாப்பில் உள்ள டிரான்ஸ்ஃபார்மரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பள்ளிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே மின்வாரியத்துறை மூலம் டிரான்ஸ்ஃபார்மர் அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்கள், டிரான்ஸ்ஃபார்மர் அமைந்துள்ள இடத்தில் காத்திருந்து பஸ் ஏறிச் செல்கின்றனர். இந்த டிரான்ஸ்ஃபார்மரை சுற்றிலும் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் தெரியாமல் கம்பி வேலியை பிடிக்கும் போது, 'ஷாக்' அடிக்கும் நிலை உள்ளது. மேலும், காற்று பலமாக அடிக்கும்போது இரண்டு மின் கம்பிகளும் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பிழம்பு ஏற்படுகிறது.அதனால், பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இந்த டிரான்ஸ்ஃபார்மரில், அதிகளவில் ஒயர்கள் செல்வதால், காற்றடிக்கும் போது ஒயர்கள் அறுந்து கீழே விழுகிறது. அதனால், உயிர்ச்சேதம் ஏற்படும் வாய்ப்புள்ளது.எனவே, 'அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஸ் ஸ்டாப்பில் உள்ள டிரான்ஸ்ஃபார்மரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us