தோல் ஆலைகள் மூடசங்கம் வலியுறுத்தல்
தோல் ஆலைகள் மூடசங்கம் வலியுறுத்தல்
தோல் ஆலைகள் மூடசங்கம் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 28, 2011 03:06 AM
ஈரோடு: 'தோல் தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூட வேண்டும்' என, சூரியம்பாளையம்
பொதுமக்கள் நல்வாழ்வு சங்க பொருளாளர் கேசவன், கலெக்டர் காமராஜிடம் மனு
அளித்தார்.
அவரது மனு: எங்கள் பகுதியில் இயங்கி வந்த தோல் தொழிற்சாலைகளால்
பாதிக்கப்பட்டு வந்தோம். விதிகளுக்கு புறம்பாக இயங்கிய 12 தோல்
தொழிற்சாலைகளை மின்சாரம் துண்டித்தது.இது எங்கள் பகுதி மக்களிடம் வரவேற்பை
பெற்றது. தோல் தொழிற்சாலையால் எங்கள் குடியிருப்பு பகுதியில் சுவாசிக்கும்
காற்றும், நீரும் மாசுபட்டுள்ளது. பலவித நோய்கள் ஏற்பட்டுள்ளன.சில நாட்களாக
இந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், எங்கள் பகுதியில் சுகாதாரம் திரும்பிக்
கொண்டிருக்கிறது. எங்களுக்கு நிரந்தர தீர்வாக, இத்தொழிற்சாலைகளை
நிரந்தரமாக மூட வேண்டும். எங்கள் பகுதியில் இயங்கும் இன்னும் சில
தொழிற்சாலைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.