/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஆத்தூரில் பருத்தி ஏலம்ரூ.28 லட்சம் வர்த்தகம்ஆத்தூரில் பருத்தி ஏலம்ரூ.28 லட்சம் வர்த்தகம்
ஆத்தூரில் பருத்தி ஏலம்ரூ.28 லட்சம் வர்த்தகம்
ஆத்தூரில் பருத்தி ஏலம்ரூ.28 லட்சம் வர்த்தகம்
ஆத்தூரில் பருத்தி ஏலம்ரூ.28 லட்சம் வர்த்தகம்
ADDED : ஜூலை 28, 2011 02:48 AM
ஆத்தூர்: ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில்
நடந்த பருத்தி ஏலத்தில், 2,500 மூட்டை பருத்தி, 28 லட்சம் ரூபாய்க்கு
விற்பனையானது.ஆத்தூர், புதுப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு
விற்பனை சங்கத்தில், நேற்று நடந்த ஏலத்துக்கு, ஆத்தூர், தம்மம்பட்டி,
கெங்கவல்லி, தலைவாசல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சின்னசேலம்,
பெரம்பலூர், அரியலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தங்கள் விளைவித்த
பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.ஏலத்தில், டி.சி.ஹெச்., ரக பருத்தி
குவிண்டால் குறைந்தபட்சமாக, 3,169 ரூபாய்க்கும், அதிகபட்சமாக, 4,810
ரூபாய்க்கும், பி.டி., ரக பருத்தி குவிண்டால் குறைந்தபட்சமாக, 3,169
ரூபாய்க்கும், அதிகபட்சமாக, 3,649 ரூபாய்க்கும், கொட்டு பருத்தி குவிண்டால்
குறைந்தபட்சமாக, 1,069 ரூபாய்க்கும், அதிகபட்சமாக, 1,869 ரூபாய்க்கும்
விற்பனையானது.ஏலத்தில், 2,500 மூட்டைகள் கொண்ட 810 குவிண்டால் பருத்தி, 28
லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.