Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/வீட்டு வசதி வாரிய நிலத்தில் செம்மண் வெட்டி கடத்தல்

வீட்டு வசதி வாரிய நிலத்தில் செம்மண் வெட்டி கடத்தல்

வீட்டு வசதி வாரிய நிலத்தில் செம்மண் வெட்டி கடத்தல்

வீட்டு வசதி வாரிய நிலத்தில் செம்மண் வெட்டி கடத்தல்

ADDED : ஜூலை 28, 2011 01:55 AM


Google News

ஓசூர்: ஓசூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான நிலத்தில் இருந்து செம்மண்கள் தாரளமாக வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது.

ஓசூர் ராயக்கோட்டை சாலையில் தமிழ்நாடு வீட்டுவசதிவாரியத்திற்கு சொந்தமான பகுதி-15 வீட்டுமனைகள் உள்ளன. இந்த நிலத்தில் வீட்டுவசதிவாரியம் குறைந்த வருவாய், மத்திய வருவாய் மற்றும் உயர் வருவாய் பிரிவு வீட்டுமனைகள் அமைத்து, கடந்த 2002ம் ஆண்டு பல லட்சம் ரூபாய் செலவில் சாலைகள், குடிநீர் குழாய், மேல்நிலை நீர் தேக்க தொட்டி, ஆழ்துறை கழிவுநீர் குழாய் அமைத்து மேம்படுத்தப்பட்டது. இந்த நிலத்தில் உள்ள வீட்டுமனைகளை வீட்டுவசதிவாரியம் கடந்த 2003ம் ஆண்டு முதல் வீட்டுமனைகளை விற்பனை செய்து வருகிறது. இப்பகுதி முழுக்க விவசாயிகளிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்திதால் சில விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால், ஒரு சில பகுதிகளை இன்னும் வீட்டு வசதி வாரியத்தால் விற்பனை செய்ய முடியவில்லை. விற்பனை செய்த வீட்டுமனைகளில் வீடுகள் கட்டி வசிப்பதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பராமரிக்க வீட்டுவசதிவாரியமும், பஞ்சாயத்து நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காததால், பயனாளிகள் வீடுகள் கட்ட தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த நிலத்தில் வீட்டுவசதி வாரியம் மூலம் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள், கழிவு நீர் குழாய்கள் மற்றும் சாலைகளை வெட்டி தனியார் சிலர் பகிரங்கமாக இரவு, பகல் என தினம் டிராக்டர்கள், லாரிகள் மூலம் மண் வெட்டி கடத்தி வருகின்றனர். இந்த நிலத்தை வீட்டுவசதிவாரியம் விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தியதால், இந்த நிலத்தில் வளமான செம்மண் காணப்படுகிறது. இந்த செம்மன்ணை அருகில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், தங்கள் வீட்டுமனைகளை மேம்படுத்த, லாரிகள், டிராக்டர்கள் மூலம் தினசரி கடத்துகின்றனர். அதே போல் செங்கல் சூளைகளுக்கு செங்கல் உற்பத்தி செய்வதற்கும் இங்கிருந்து லாரிகள் மூலம் செம்மண் வெட்டி கடத்தப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வீட்டுவசதிவாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். கீழ் மட்ட அதிகாரிகள், இந்த சம்பவத்தை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், மாமூல் வாங்கி கொண்டு மண் கடத்தலுக்கு துணைபோய் வருகின்றனர். இதனால், வீட்டுவசதிவாரியத்தால் மேம்படுத்தப்பட்ட இந்த நிலத்தில் உள்ள செம்மண் முழுவதும் தற்போது வெட்டி எடுக்கப்பட்டு வருவதால், அப்பகுதி முழுவதும் பெரிய பள்ளத்தாக்குகளாக மாறிவிட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us