/உள்ளூர் செய்திகள்/நாகப்பட்டினம்/செம்போடையில் ஏ.டி.எம்., திறப்பு விழாசெம்போடையில் ஏ.டி.எம்., திறப்பு விழா
செம்போடையில் ஏ.டி.எம்., திறப்பு விழா
செம்போடையில் ஏ.டி.எம்., திறப்பு விழா
செம்போடையில் ஏ.டி.எம்., திறப்பு விழா
ADDED : ஜூலை 28, 2011 01:50 AM
வேதாரண்யம்: வேதாரண்யம் செம்போடையில், சிட்டி யூனியன் வங்கி ஏ.டி.எம்., திறப்பு விழா நடந்தது.
வேதாரண்யம் சிட்டி யூனியன் வங்கி ஏ.டி.எம்., திறப்பு செம்போடையில் நேற்று நடந்தது. செம்போடை ஆர்.வி., கல்வி நிறுவனங்களின் தாளாளர் வரதராஜன் தலைமை வகித்தார். குருகுலம் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் ஹரிகிருஷ்ணன், ஏ.டி.எம்.,மை திறந்து வைத்தார். வங்கி உதவி பொதுமேலாளர் சுப்ரமணியன், ஏ.டி.எம்., இயந்திரத்தை இயக்கி வைத்தார். கிளைமேலாளர் விஜயகுமார், ஆர்.வி., பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில், மேலாளர் கலைச்செல்வன், முன்னாள் லயன்ஸ் சங்கத் தலைவர்கள் ராஜேந்திரன், ஷாகுல் அமீது, சாமிச்செட்டி, மாவட்ட கவுன்சிலர் கனகராஜ், யூனியன் கவுன்சிலர் ராமகிருஷ்ணன், பஞ்சாயத்து தலைவர் மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


