/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/பனிமய மாதா பேராலய விழாவில் இன்று மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு திருப்பலிபனிமய மாதா பேராலய விழாவில் இன்று மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு திருப்பலி
பனிமய மாதா பேராலய விழாவில் இன்று மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு திருப்பலி
பனிமய மாதா பேராலய விழாவில் இன்று மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு திருப்பலி
பனிமய மாதா பேராலய விழாவில் இன்று மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு திருப்பலி
தூத்துக்குடி : தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவில் இன்று மாலை மாற்றுத் திறனுடையோருக்கான சிறப்புத் திருப்பலி நடக்கிறது.
மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை 6.30 மணிக்கு இனிகோநகர் பங்கு இறைமக்கள், 7.30 மணிக்கு தூய சார்லஸ் ஆலய பங்கு இறைமக்கள், சார்லஸ் திருச்சிலுவை மழலையர் தொடக்கப்பள்ளி மற்றும் மனையியல் கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், 8.30 மணிக்கு அண்ணாநகர், டூவிபுரம் பங்கு இறைமக்கள், 9.30 மணிக்கு தூய அடைக்கல அன்னை சபை அருட்சகோதரிகள், தஸ்நேவிஸ்மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள், 11 மணிக்கு நகர செபக்குழுக்களுக்கான சிறப்பு திருப்பலி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு மாற்றுத்திறனுடையோருக்கான சிறப்பு திருப்பலி நடக்கிறது. இரவில் 'விடுதலை பெண்மணி' என்ற தலைப்பில் கடியபட்டிணம் பங்குத் தந்தை செல்வராஜ் மறையுரையாற்றுகிறார். வரும் 31ம் தேதி 7.30 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் புதுநன்மை திருப்பலியும், மாலை 6.15 மணிக்கு செபமாலை, நற்கருணைப்பவனி, மறையுரை மற்றும் நற்கருணை ஆசீரும் நடக்கிறது. ஆகஸ்ட் 5ம் தேதி இரவு அன்னையின் திருவுருவப் பவனியுடன் விழா நிறைவு பெறுகிறது.


