/உள்ளூர் செய்திகள்/சென்னை/மூன்று மாதங்களில் சென்னையில் மின்வெட்டு ரத்து : வல்லூர் மின் நிலைய உற்பத்தி பணிகள் தீவிரம்மூன்று மாதங்களில் சென்னையில் மின்வெட்டு ரத்து : வல்லூர் மின் நிலைய உற்பத்தி பணிகள் தீவிரம்
மூன்று மாதங்களில் சென்னையில் மின்வெட்டு ரத்து : வல்லூர் மின் நிலைய உற்பத்தி பணிகள் தீவிரம்
மூன்று மாதங்களில் சென்னையில் மின்வெட்டு ரத்து : வல்லூர் மின் நிலைய உற்பத்தி பணிகள் தீவிரம்
மூன்று மாதங்களில் சென்னையில் மின்வெட்டு ரத்து : வல்லூர் மின் நிலைய உற்பத்தி பணிகள் தீவிரம்
சென்னை : அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உறுதியளித்த படி, தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க, மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தை, மின்வெட்டு இல்லாத மாநிலமாக்குவதாக அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியது. இதை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை, அரசு மேற்கொண்டுள்ளதாக, மின்துறை செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில், முதற்கட்டமாக மின்வெட்டை ரத்து செய்யவும், குறைந்த மின்னழுத்த பிரச்னைகளை தீர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.சென்னைக்கு, தினந்தோறும், 2,200 மெகாவாட் மின்சாரம் சராசரியாக தேவைப்படுகிறது. மின்பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில், மின்வெட்டு மூலம், ஒரு மணி நேரத்திற்கு, சென்னையில் மட்டும், 250 மெகாவாட் வரை சேமிக்கப்படுகிறது.
பற்றாக்குறையான மின் சப்ளை கிடைக்கும்போது, அதை சமாளிக்க, மின்வெட்டை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது மின்வெட்டை ரத்து செய்தால், அனைத்து இடங்களிலும், குறைந்த மின்னழுத்த நிலை ஏற்பட்டு, ஸ்தம்பித்து விடும்.இந்நிலையில், சென்னை நகரின் மின்வெட்டை தளர்த்த, வல்லூர் அனல்மின்நிலைய திட்டம் கை கொடுக்கும் என, மின்வாரிய அதிகாரிகள் நம்புகின்றனர். இது குறித்து, மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னைக்கு அருகே, வல்லூரில் அமைக்கப்பட்டுள்ள அனல்மின் நிலையத்தில், கட்டுமானப் பணிகள் முடிந்து, உற்பத்தி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை சென்னைக்கு கொண்டு வர, அலமாதி அருகே, 'கிரிட்' இணைப்பு பணி கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிந்தது.
தற்போது, புதிய மின்தொடரில் (கிரிட்) மின்சப்ளை செய்வதற்கான தொழில்நுட்பப் பணிகள் துவங்கியுள்ளன. மின் சப்ளைக்கான செயல்முறை சோதனையும் நடக்கிறது. வல்லூர் அனல் மின் நிலையத்தின் மூன்று யூனிட்டுகளில், 500 மெகாவாட் திறன் கொண்ட முதல் யூனிட், வரும் நவம்பரில் உற்பத்தியை முழுமையாக துவங்கும்.இதனால், தினமும் ஏற்படும் மின்பற்றாக்குறை, 1,000 மெகாவாட்டாக குறையும். அதேநேரம், மழைக்காலம் துவங்கிவிடும் என்பதால், மின்சார பயன்பாடும் தமிழகம் முழுவதும், 500 மெகாவாட் குறையும். இதனால், இன்னும் மூன்று மாதங்களில், சென்னையில் மின்வெட்டு முழுமையாக ரத்தாக அதிக வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
ஹெச்.ஷேக்மைதீன்