ADDED : ஜூலை 27, 2011 05:28 AM
நியூயார்க்: அமெரிக்காவில் புலனாயவு ஏஜென்சியினரால் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டிருந்து காஷ்மீர் பிரிவினைவாதி குலாம்நபிபை, நேற்று ஜாமீனில் விடுதலையானார்.
காஷ்மீர் பிரிவினை வாத தலைவரும், அமெரிக்காவில் காஷ்மீர் அமெரிக்க கவுன்சில் தலைவருமான குலாம்நபி பை கடந்த சில நாட்களுக்குமுன்பு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அமைப்புடன்தொடர் கொண்டிருந்ததாகவும், அந்த அமைப்பிடமிருந்து தனது அமெரிக்க காஷ்மீர் கவுன்சிலுக்கு பல கோடி ரூபாய் நன்கொடை பெற்றுவந்ததாகவும் எழுந்த புகாரின் பேரில் அமெரிக்க புலனாய்வு ஏஜென்சியினர் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது .வழக்கு அமெரிக்க கோர்டில் நடந்தது வந்தது. தற்போது வீட்டுக்காவலில் இருந்து குலாம்நபிபைக்கு நேற்று அமெரிக்க கோர்ட் ஒருலட்சம் பாண்ட பத்திரத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் பேரில் ஜாமின் வழங்கியது.