/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கேரளா பாணியில் திருமங்கலம் சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கொடூர கும்பல்கேரளா பாணியில் திருமங்கலம் சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கொடூர கும்பல்
கேரளா பாணியில் திருமங்கலம் சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கொடூர கும்பல்
கேரளா பாணியில் திருமங்கலம் சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கொடூர கும்பல்
கேரளா பாணியில் திருமங்கலம் சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கொடூர கும்பல்
ADDED : ஜூலை 27, 2011 03:44 AM
ராமநாதபுரம்:மதுரை திருமங்கலத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஈஸ்வரியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடத்தி, இரண் டரை ஆண்டுகளாக விபச்சாரத்தில் ஒரு கும்பல் ஈடுபடுத்தியது.
சிறுமியை கற்பழித்ததாக ராமேஸ்வரம் நகராட்சி தி.மு.க., தலைவர் ஜலீல் உட்பட பலர் மீது ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை, திருமங்கலம் அருகே வாகைகுளத்தை சேர்ந்த சிவசாமியின் மகள் ஈஸ்வரி,17.(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மூன்று ஆண்டு களுக்கு முன் திருமங்கலத்தில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்தார். ஒரு நாள் இரவில் ஊர் திரும்ப, பஸ்சிற்கு பணம் இல்லாமல் திருமங்கலம் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தார். அப்போது உடன் வேலை பார்த்த தோழியின் தாயார், அவரது வீட்டிற்கு அழைத்து சென்று, வேறு நல்ல வேலை வாங்கிதருவதாக மூளை சலவை செய்தார். பின்னர், மதுரை கீழ்குடியை சேர்ந்த சத்யா என்பவரிடம் பணம் பெற்று கொண்டு சிறுமியை ஒப்படைத்தார். சத்யா, திருப்பரங்குன்றத்தை சேர்ந்த செல்வியிடம் சிறுமியை கைமாற்றினார். இதுபோல் பல்வேறு புரோக்கர்களிடம் விற்கப்பட்ட சிறுமி, பல வந்த மாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டார்.மதுரை, காரைக்குடி, சிவகங்கை, கொடைக்கானல், சென்னை, திருச்சி போன்ற பல்வேறு ஊர்களில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு விருந்தாக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன், ராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு புரோக்கரிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன் விபச்சார கும்பலிடமிருந்து தப்பிய சிறுமியை, ராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவன ஊழியர் ரைசுதீன் காப்பாற்றி, ராமநாதபுரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். அதை வாங்க போலீசார் மறுத்துவிட்டனர். ரைசுதீன், சிறுமி பற்றி தமிழக டி.ஜி.பி., ராம னுஜத்திடம் போனில் தெரிவித்தார். டி.ஜி.பி., உத்தரவுப்படி ராமநாதபுரம் எஸ்.பி., அனில்குமார் நட வடிக்கை எடுத்தார். இதையடுத்து, ராமநாதபுரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், சிறுமியிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத் தப்பட்டது. அப்போது கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல்வேறு நபர்களிடம் சிக்கி, கற்பழிக்கப் பட்டது பற்றி கதறியவாறு சிறுமி தெரிவித்தார். திருமங்கலத்தை சேர்ந்த பூங்கோதை(ஈஸ்வரியின் தோழி) தாயார், புரோக்கர்கள் சத்யா, செல்வி, சந்திரா, கலைச்செல்வி, இவரது கணவர் சதீஷ், காரைக்குடியை சேர்ந்த புரோக்கர் ருக்மணி, ராமேஸ்வரம் நகராட்சி தி.மு.க., தலைவர் ஜலீல்(தற்போது சென்னையில் வசித்து வருகிறார்), சாத்தான்குளம் சேக், ராமேஸ்வரம் இளங்கோ, புரோகிதர் ஒருவர், ராமநாதபுரம் ஆனந்தம், மதுரை ஆட்டோ டிரைவர் பாண்டி, புரோக் கர் ராஜேந்திரன் மற்றும் பலர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர், சிறுமியை ராமநாதபுரம் ஜே.எம்.,1 கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். மாஜிஸ்திரேட் பாஸ்கரன் உத்தரவுபடி, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. கேரளா பாணியில் தமிழகத்திலும் உள்ள விபச்சார நெட்வொர்க் திருமங்கலம் சிறுமி மூலம் அம்பலமாகி உள்ளது. சிறுமி யிடம் நடத்தும் தொடர் விசாரணையில் மேலும் பல வி.ஐ.பி.,க்களின் பெயர் வெளிவரலாம், என போலீசார் தெரிவித்தனர்.