/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கமுதி அருகே லாரி கவிழ்ந்து இருவர் பலி : காயம் 35கமுதி அருகே லாரி கவிழ்ந்து இருவர் பலி : காயம் 35
கமுதி அருகே லாரி கவிழ்ந்து இருவர் பலி : காயம் 35
கமுதி அருகே லாரி கவிழ்ந்து இருவர் பலி : காயம் 35
கமுதி அருகே லாரி கவிழ்ந்து இருவர் பலி : காயம் 35
ADDED : ஜூலை 27, 2011 03:32 AM
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆட்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்ததில், இருவர் பலியாகினர்.
35 பேர் காயம் அடைந்தனர். கமுதி அருகே உள்ள புதுக்குளம் கண்மாயில் விறகு வெட்டுவதற்காக கட்டளாங்குளத்தை சேர்ந்த 50 பெண்கள் உட்பட 60 பேர் திம்மநாதபுரத்தை சேர்ந்த ராஜா என்பவரது 'ஈச்சர்' லாரியில்(டி.என்., 57 இசட் 8628) சென்று கொண்டிருந்தனர். காலை 8 மணிக்கு காடமங்கலம் அருகே ரோட்டின் வளைவில் வேகமாக சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தலைகீழாக கவிழ்ந்தது. இதில் கட்டளாங்குளம் பாலகிருஷ்ணன் (34), முருகன் (30) ஆகியோர் பலியாகினர். 30 பெண்கள் உட்பட 35 பேர் காயமடைந்து சாயல்குடி மற்றும் அருப்புக்கோட்டை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். பெருநாழி போலீசார் தலைமறைவான டிரைவர் கூடல்ராஜாவை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போதிய பஸ் வசதி இல்லாததாலும், குறைந்த கட்டணம், வீட்டின் அருகிலேயே ஏறி, செல்ல வேண்டிய பகுதி அருகே செல்வதும்வசதி இருப்பதாலும் மக்கள் சரக்கு வாகனங்களில் பயணிப்பதை விரும்புகின்றனர். மேலும் போலீசாருக்கு மாதம்தோறும் மாமூல் கிடைத்து விடுவதால், அவர்கள் சரக்கு வாகன பயணங்களை கண்டுகொள்வதில்லை.கமுதி டி.எஸ்.பி., சீனிவாச பெருமாள் கூறுகையில், ''சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.