ADDED : ஜூலை 27, 2011 12:31 AM
மயிலம் : மயிலம் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
கூட்டத்திற்கு ஒன்றிய சேர்மன் மலர்மன்னன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் கல்யாணசுந்தரி, சதாசிவம் முன்னிலை வகித்தனர். துணை சேர்மன் சுரேஷ்குமார் வரவேற்றார். கூட்டத்தில் வீடூர், சித்தணி, பெரியதச்சூர்உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் வசதிக்காக பொதுநிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணை பி.டி.ஓ.,க்கள் மணி, தட்சிணாமூர்த்தி, இளங்கோ, பொறியாளர் பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர்கள் முருகவேல், பரமேஸ்வரன், நடராஜன், சின்னதுரை, குணசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


