ADDED : ஜூலை 26, 2011 11:28 PM
செஞ்சி : செஞ்சி பெரியகரம் பால முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா நடந்தது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகமும் செய்தனர். காய்ச்சிய இரும்பு தகட்டை கையால் அடித்து வளைத்தனர். மாலை செடல் உற்சவமும், தீமிதியும் நடந்தது. பக்தர்கள் செடல் போட்டு லாரிகளில் தொங்கியும், லாரிகளை இழுத்தும் வந்தனர். நேற்று இடும்பன் பூஜை நடந்தது.