ADDED : ஜூலை 26, 2011 11:19 PM
சிவகங்கை: வரதட்சணை கொடுமை செய்ததாக, கணவர் உட்பட 3 பேர் மீது சிவகங்கை மகளிர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.சிவகங்கை அருகே கீழப்பூங்குடியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் மணிகண்டன் (30).
இவருக்கும் மதுரை சோலை அழகுபுரத்தை சேர்ந்த பாலசிகாமணி மகள் மீனாட்சிக்கும் ஒன்றரை ஆண்டிற்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 12 பவுன் நகை, சீதன பொருட்கள் கொண்டு வந்துள்ளார். அடிக்கடி குடித்துவிட்டு வரும் மணிகண்டன், மனைவியிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளார். மீனாட்சி புகாரின்படி, சிவகங்கை மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் குமாரி, பெண்ணின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் கிருஷ்ணன், செல்வகுமார் மீது வழக்கு பதிந்துள்ளார்.